ADDED : ஜூன் 11, 2026 06:31 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதியில் நேற்று மதியம் ஒரு மணி நேரம் மழைக்கே ராமேஸ்வரம், மதுரை ரோட்டில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்றை மக்கள் அனுபவித்தனர்.
ராமநாதபுரம் நகராட்சி, சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சிகளில் மழை நீர் வடிகால்கள் பராமரிப்படாமல் உள்ளதால் மழை நீர் செல்ல வழியில்லாமல் குளம் போல ரோடுகள், தாழ்வான பகுதிகளில் தேங்குவது தொடர்கிறது. நேற்று மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரை மிதமான பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது ராமேஸ்வரம் ரோடு, பாரதிநகர் ரோட்டில் குளம் போல தேங்கியது.
நடந்து சென்ற மாணவர்கள், மக்கள், டூவீலர்களில் செல்பவர்களும் அவதிக்குள்ளாகினர். அரண்மனை பகுதியில் மழை நீரால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். நகர், புறநகர் பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றி ஒருமணி நேரத்திற்கு மிதமான மழை பெய்தால் கூட தண்ணீர் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உட்பட அனைத்து இடங்களிலும் நீர் குளம் போல தேங்குவது வாடிக்கையாகியுள்ளது.
எனவே மழைநீர் தடையின்றி ஊருணிகளில் சேமிக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்கால்களை சீரைமக்க புதிய கலெக்டர் சிவகுரு பிரபாகரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
–––--------
