ADDED : ஆக 05, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார், கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சிலநாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
நேற்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. கமுதி,கோட்டைமேடு பசும்பொன், அபிராமம், கல்லுப்பட்டி, நாராயணபுரம், நகரத்தார்குறிச்சி உலகநடை, பாக்குவெட்டி, முதுகுளத்துார் தாலுகா கிராமங்களில் காற்றுடன் பரவலாக மழைப்பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.