நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
திருவாடானை, தொண்டி பகுதியில் கடும் வெயிலால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் தெருக்கள் வெறிச்சோடிcது.
பல மாவட்டங்களில் கனமழை பெய்யும், வெப்பம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருவாடானை பகுதியில் மழை பெய்யுமா என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு திருவாடானை, தொண்டி பகுதியில் மிதமான மழை பெய்ததால் வெப்பம் ஓரளவு குறைந்தது.