நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம், பனைக்குளம், அழகன்குளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மழை பெய்தது.
கடந்த சில நாட்களாககடும் வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து இதமான காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதே நேரத்தில் தேவிபட்டினம் கடலோரப் பகுதிகளில் மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியதால் தொழிலாளர்கள் பாதிப்படைந்தனர்.
*திருவாடானையில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.