தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மழை, பலத்த காற்றால் கரிமூட்டம் தொழில் பாதிப்பு

மழை, பலத்த காற்றால் கரிமூட்டம் தொழில் பாதிப்பு

மழை, பலத்த காற்றால் கரிமூட்டம் தொழில் பாதிப்பு


ADDED : மே 21, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 06:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக மேக மூட்டம், மழை, பலத்த காற்று போன்ற பருவகால மாற்றத்தால் கரிமூட்டம் தொழில் முடங்கியுள்ளது. சீசன் நேரத்தில் வேலையின்றி தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான தரிசு நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இம்மரங்களை வெட்டி கரி மூட்டத் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்துார், கமுதி, சாயல்குடி, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் அதிகளவில் கரிமூட்டத்தொழில் நடக்கிறது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த கோடை கால கரிமூட்டம் தொழில் மார்ச், ஏப்., மே மாதங்களில் தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த இரு வாரமாக அவ்வப்போது சாரல் மழை, மேக மூட்டம், பலத்த காற்று போன்ற பருவக்கால மாற்றங்களால் கரி மூட்டம் இடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கரிமூட்டத் தொழிலாளர்கள் கூறுகையில், இங்கிருந்து கேரளா, உ.பி.,போன்ற வெளி மாநிலங்களுக்கு எரிபொருளுக்காக கரியை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். சீமைக் கருவேல மரங்களை ஏக்கருக்கு ரூ.5000 வரை குத்தகைக்கு எடுத்து வெட்டி விறகு எடுக்கிறோம். தற்போது சீசன் நேரத்தில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

வெளியே கடைகளில் சில மாதங்களுக்கு முன் டன் ரூ.3500க்கு விற்ற விறகு ரூ.500 உயர்ந்து ரூ.4000த்திற்கு விற்கிறது. விறகு விலை உயர்வு, ஆட்கள் கூலி என முதலீடு அதிகரித்துள்ளது. பருவகால மாற்றத்தால் இவ்வாண்டு உரிய வருமானம் ஈட்ட முடியவில்லை என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us