/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய கால்நடைநோய் புலனாய்வு மையம் முன் மழைநீரால் அவதி
/
புதிய கால்நடைநோய் புலனாய்வு மையம் முன் மழைநீரால் அவதி
புதிய கால்நடைநோய் புலனாய்வு மையம் முன் மழைநீரால் அவதி
புதிய கால்நடைநோய் புலனாய்வு மையம் முன் மழைநீரால் அவதி
ADDED : ஆக 23, 2024 03:51 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கால்நடை நோய்புலனாய்வு மையம் முன்பு மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாகஉள்ளதால் அலுவலர்கள், மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கால்நடைபராமரிப்பு துறை சார்பில்ரூ. 50 லட்சத்தில் கால்நடை நோய்புலனாய்வு பிரிவு மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை காணொலி காட்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆக.20ல் திறந்து வைத்தார்.
இக்கட்டம் முன்பு மழைநீர் குளம் போல தேங்கி இருந்ததால் நடந்துசெல்ல அலுவலர்கள், மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் பல நாட்களாக தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே மழைநீரை அகற்ற பட்டணம்காத்தான் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.