/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவமனைக்குள் தேங்கிய மழை நீர்
/
மருத்துவமனைக்குள் தேங்கிய மழை நீர்
ADDED : மார் 13, 2025 04:44 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழை நீரால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதிகாலை 2:00 மணி முதல் இடி, மின்னலுடன் மழை பெய்யத் துவங்கியது. காலை 6:00 மணி வரை 23 மி.மீ., மழை பெய்தது.
அதன் பிறகும் தொடர்ந்து மதியம் 1:00 மணி வரை கனமழை பெய்தது. இதனால் ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குள் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமப்பட்டனர்.
அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தேங்கிய மழை நீரை அகற்றவும், மழை நீர் தேங்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.