/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வடிகால் வசதியின்றி ரோட்டில் மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி
/
வடிகால் வசதியின்றி ரோட்டில் மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி
வடிகால் வசதியின்றி ரோட்டில் மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி
வடிகால் வசதியின்றி ரோட்டில் மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 19, 2024 12:46 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் போதுமான வடிகால் வசதியின்றி மழைபெய்தால் ரோடுகளில் குளம்போல நீர் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரத்தில் நேற்று மதியம் அரைமணிநேரம் வரை மழைபெய்தது. இதன்காரணமாக ராமநாதபுரம் அரண்மனை கோட்டை வாசல் விநாயகர் கோயில் சந்து மளிகைகடை பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. மக்கள் நடந்துகூட செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
மேலும் ராமநாதபுரம்-ராமேஸ்வரம் ரோடு ரயில்வே பீடர், பாரதிநகர் உள்ளிட்ட இடங்களில் வடிகால் வசதியின்ற குளம் போல தண்ணீர் தேங்கியது.
இதனால் வாகனங்கள் ஓட்டி செல்லும் போது விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
எனவே நகராட்சி நிர்வாகத்தினர், நெடுஞ்சாலைத்துறையினர்மழைநீர் ரோட்டில் தேங்கி நிற்காத வகையில் வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வாகனஓட்டிகள், மக்கள் வலியுறுத்தினர்.