/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தேங்கும் மழை நீர்
/
பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தேங்கும் மழை நீர்
பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தேங்கும் மழை நீர்
பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தேங்கும் மழை நீர்
ADDED : ஆக 07, 2024 06:45 AM

பரமக்குடி : -பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள், மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.
பரமக்குடி ஐந்து முனை ரோடு துவங்கி ஓட்டப்பாலம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நெடுஞ்சாலையில் இருந்து இரு புறங்களிலும் 100 அடி வரை அரசு இடம் உள்ளது.
இங்கு குடியிருப்பையொட்டி மழை நீர் வடிந்திடும் வகையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாறுகால் அமைக்கப்பட்டது. மேலும் ரூ.2 கோடியில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டு போக்குவரத்தை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது
ஆனால் பேவர் பிளாக் தளங்களை அமைக்கும் போது நடுவில் இருக்கும் மின்கம்பங்கள் நகர்த்தப்படாமல் உள்ளன.
மழை நேரங்களில் தண்ணீர் வாறுகால்களில் வழிந்தோட வழி ஏற்படுத்தப்படாமல் அப்படியே தேங்குகிறது.
இதனால் பல கோடி செலவு செய்து அமைக்கப்பட்ட வாறுகால் மற்றும் பேவர் பிளாக் ரோடு பொதுமக்களுக்கு பயன்பாடின்றி இருக்கிறது.
மேலும் ரோட்டில் இருபுறமும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ள நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலை இருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் சப்-கலெக்டர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.