/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதை, ரவுடியிசம் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் ராஜேந்திர பாலாஜி பேட்டி
/
போதை, ரவுடியிசம் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் ராஜேந்திர பாலாஜி பேட்டி
போதை, ரவுடியிசம் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் ராஜேந்திர பாலாஜி பேட்டி
போதை, ரவுடியிசம் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் ராஜேந்திர பாலாஜி பேட்டி
ADDED : ஆக 01, 2024 04:13 AM
கமுதி: போதை இல்லாத, ரவுடியிசம் இல்லாத தமிழகத்தை அரசு உருவாக்க வேண்டும் என்று அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். கமுதியில் அவர் கூறியதாவது:
கமுதி கோட்டைமேடு கோட்டை 300 ஆண்டுகள் பழமையானது. தொல்லியல் துறையினர் கமுதி கோட்டையை பராமரிக்க வேண்டும். வருங்கால இளைஞர்களுக்கு கோட்டையின் வீரம், மகத்துவம் தெரிய வேண்டும்.
போதை பொருள் கடத்தல், விற்பனை வழக்குகளில் போலீசார் கடுமையாக நடவடிக்கை எடுக்கத்தான் செய்கின்றனர். எட்டரை கோடி மக்கள் வாழும் நிலையில் தவறுகள் நடக்கத்தான் செய்யும். அரசும் நடவடிக்கை எடுக்கத்தான் செய்கிறது. இதை இன்னும் வேகப்படுத்தி போதையில்லாத, ரவுடியிசம் இல்லாத தமிழகம் உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னதால் தான் அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வாக்களித்தனர். சிறுபான்மை மக்கள், அரசு ஊழியர்களால் தான் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. இன்றைக்கு அவர்கள் போராடுகின்றனர். ஏமாற்றியவர்கள் யார் என்று அவர்களுக்கு தெரியும்.
வாக்களித்தவர்கள், அளிக்காதவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் தான் காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கி பணிகள் நடந்தது.
தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. திட்டத்தை நிறைவேற்றினால் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை தீர்ந்து விவசாயம் செழிக்கும். அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த திட்டம் என்று பார்க்காமல் நிறைவேற்ற வேண்டும் என்றார்.