/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மொத்தி வலசையில் ரக்க்ஷா பந்தன் விழா
/
மொத்தி வலசையில் ரக்க்ஷா பந்தன் விழா
ADDED : ஆக 21, 2024 09:02 AM
திருப்புல்லாணி : -திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி மொத்தி வலசையில் ராஜ யோக தியான நிலையம் சார்பில் ரக்க்ஷா பந்தன் விழா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அன்பு, கருணை, சகோதரத்துவம் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
ரக்க்ஷா பந்தன் எனும் புனித கயிற்றை ராஜயோக தியான ஆசிரியை ராஜலட்சுமி அனைவருக்கும் கைகளில் அணிவித்தார். பொறுப்பாளர் ஸ்ரீதமிழ் வரவேற்றார்.
மொத்தி வலசை ஊராட்சி தலைவர் சிகப்பி, கிராம தலைவர் கணேசன், கே.கே.வலசை பிச்சைமணி, கராத்தே ஆசிரியர் சசிகுமார், குப்பச்சி வலசை கிராமத் தலைவர் முத்து கருப்பன் உட்பட ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
உலக நன்மைக்கான சிறப்பு பிரார்த்தனை மற்றும் தியானம் நடந்தது.
ஏற்பாடுகளை பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் அமைப்பினர் செய்திருந்தனர்.