/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி ராமநாதபுரம் ஏ.ஆர்.எஸ் அணி வெற்றி
/
மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி ராமநாதபுரம் ஏ.ஆர்.எஸ் அணி வெற்றி
மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி ராமநாதபுரம் ஏ.ஆர்.எஸ் அணி வெற்றி
மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி ராமநாதபுரம் ஏ.ஆர்.எஸ் அணி வெற்றி
ADDED : ஜூலை 01, 2024 05:51 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் நண்பர்கள் கிரிக்கெட் கிளப் சார்பில் 37ம் ஆண்டு மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய் மைதானத்தில் நடைபெற்றது.
ஜூன் 19ல் போட்டியை எஸ்.பி., சந்தீஷ் துவக்கி வைத்தார். போட்டியில் மதுரை, ராமநாதபுரம், மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசான ரூ.35 ஆயிரத்தை ராமநாதபுரம் ஏ.ஆர்.எஸ்., அணியினரும், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரத்தை பரமக்குடி அணியினரும், மூன்றாம் பரிசு ரூ.15 ஆயிரத்தை மதுரை அணியினரும், நான்காம் பரிசான ரூ.10 ஆயிரத்தை ஆர்.எஸ். மங்கலம் அணியினரும், ஐந்தாம் பரிசான ரூ.7000 ராமநாதபுரம் ரெயின்போ அணியினரும் பெற்றனர்.
வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு திருவாடானை டி.எஸ்.பி., நிரேஷ் பரிசுகள் வழங்கினார்.
டாக்டர் மைக்கேல் ஜான்சன், நண்பர்கள் கிரிக்கெட் கிளப் தலைவர் பகுருதீன், செயலாளர் அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.