/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் 'நீட்' தேர்வு: 77 பேர் 'ஆப்சென்ட்'; வெயிலில் காத்திருந்து அவதி

ADDED : மே 06, 2024 12:35 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த 'நீட்' தேர்வில் 77 பேர் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.
மாவட்டத்தில் ராமநாதபுரம் செய்யது அம்மாள்பொறியியல் கல்லுாரியில் 912 மாணவர்களில் 887 பேர் 'நீட்' தேர்வு எழுதினர். தேவிபட்டினம் வேலுமனோகரன் பெண்கள் கல்லுாரியில் 504க்கு488 பேரும், தேவிபட்டி னம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 309க்கு 298 பேரும், ஷிபான் நுாருல் குளோபல் அகடமி பள்ளியில் 192க்கு 180 பேர் தேர்வு எழுதினர்.
கலெக்டர் அலுவலகவளாகத்தில் உள்ள முகமது சதக்கபீர் பப்ளிக் பள்ளியில் 312க்கு 299பேர் என 2229 பேரில் 2152 பேர் தேர்வு எழுதினர்.77 பேர் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். தேர்வு அறைக்குள் செல்ல நீண்ட வரிசையில் சோதனை இடுவதற்காக காத்திருந்த மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வந்த பெற்றோர் கோடை வெப்பம் தாங்க முடியாமல் சிரமப்பட்டனர்.