/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காஸ் குழாய் உடைப்பு ராமநாதபுரம் மக்கள் அச்சம்
/
காஸ் குழாய் உடைப்பு ராமநாதபுரம் மக்கள் அச்சம்
ADDED : ஜூன் 19, 2024 02:15 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் பழைய செக் போஸ்ட் பகுதியில், குடிநீர் குழாய்க்காக தோண்டிய போது, இயற்கை எரிவாயு குழாயை உடைத்ததால் காஸ் வெளியேறியது. இதனால், மக்கள் அச்சமடைந்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் சாலையில், பழைய செக்போஸ்ட் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக, மண் அள்ளும் இயந்திரத்தால் நேற்று மாலை பள்ளம் தோண்டினர். வீடுகளுக்கு, 'காஸ் சப்ளை' செய்வதற்காக அப்பகுதியில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கப்பட்டிருந்தது.
அந்த குழாயை உடைத்ததால், இயற்கை எரிவாயு வெளியேறியது. இதனால், அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்து, வெளியிடங்களுக்கு ஓடினர்.
அதன் பின் தான், 'இயற்கை எரிவாயு கசிந்தால், காற்றில் கரைந்து விடும். எல்.பி.ஜி., காஸ் போல தீப்பற்றாது என தெரிந்ததால், நிம்மதி அடைந்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட காஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின், குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது.