/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் பெரிய கண்மாய் தென் கலுங்கில் பராமரிப்பு இன்றி நாணல் புற்களால் சிக்கல்

ADDED : ஜூன் 05, 2024 12:10 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் பெரிய கண்மாய் தென்கலுங்கு பகுதியில் பராமரிப்பு இல்லாததால் கலுங்கிலிருந்து வெளியேறும் நீர் செல்வதற்கு இடையூறாக நாணல் புற்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதிக்கு வரும். இங்கிருந்து இதற்கு கீழ் உள்ள பகுதிகளில் பாசன கண்மாய்களுக்கு செல்லும். தென் கலுங்கு பகுதியால் மட்டும் 3962.45 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைகிறது.
இந்த தென்கலுங்கு வழியாகச் செல்லும் பகுதியில் உள்ள கண்மாய்களை நிறைக்கும் வைகை நீர் அதன் பின் ஆற்றாங்கரை பகுதியில் கடலில் சென்று கலக்கும். புத்தேந்தல், களரி, மேலமடை போன்ற கண்மாய்கள் பெரிய அளவில் பாசன நிலங்களை கொண்டுள்ளது.
ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதியில் இருந்து திறக்கப்படும் நீர் செல்லும் பாசனக் கால்வாய் பகுதியில் நாணல் புதர் மண்டியுள்ளது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றாமல் அப்படியே விட்டுள்ளனர்.
மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும் போது கண்மாய் கலுங்கில் நீர் திறக்கப்பட்டால் பாசன கால்வாய் வழி செல்ல முடியாமல் புதர்கள் மண்டியுள்ளதால்கால்வாய்களை உடைக்கும் நிலை ஏற்படும். பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறையினர் ராமநாதபுரம் கண்மாய் கலுங்கு பகுதியில் பராமரிப்பு பணிகளை செய்து நீர் செல்வதற்கு இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.