/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் ரயில் நிலைய நடைமேடை3 மாதத்தில் சேதம்: பயணிகள் தவிப்பு தரமற்ற பணியால் 3 மாதங்களில் சேதம்

ADDED : செப் 03, 2024 05:09 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட நடைமேடை சேதமடைந்துள்ளதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து தினமும் மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னைக்கும், வாரத்தில் 3 நாட்கள் ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரிக்கும், வாரம் ஒரு முறை கோவை, புவனேஸ்வர், செக்கந்திராபாத், ஓகா, ஆகிய பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
ரயில் நிலையத்தில் 3-வது நடைமேடை மூன்று மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த நடைமேடையில் பதிக்கப்பட்டிருந்த ஓடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் ரயில்களில் ஏறுவதற்காக வரும் பயணிகள் காயம் அடைகின்றனர். ரயில் புறப்படும் முன் அவசரமாக வந்து ரயிலில் ஏற முயற்சிக்கும் போது இது போன்ற சேதமடைந்த நடைமேடையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ரயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நடை மேடைகளை சீரமகை்க வேண்டும், என ரயில்வே பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.