/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிளஸ் 1 தேர்வில் ராமநாதபுரம் மாநில அளவில் 13வது ரேங்க்
/
பிளஸ் 1 தேர்வில் ராமநாதபுரம் மாநில அளவில் 13வது ரேங்க்
பிளஸ் 1 தேர்வில் ராமநாதபுரம் மாநில அளவில் 13வது ரேங்க்
பிளஸ் 1 தேர்வில் ராமநாதபுரம் மாநில அளவில் 13வது ரேங்க்
ADDED : மே 15, 2024 06:45 AM
ராமநாதபுரம் : பிளஸ் 1 பொதுத்தேர்வில் 92.83 சதவீதம்தேர்ச்சி பெற்று மாநில அளவில் கடந்த ஆண்டைப்போலவே ராமநாதபுரம் மாவட்டம் 13வது ரேங்க் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 2023-24ம் கல்வி ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்புபொதுத்தேர்வு முடிவுகளை தொடர்ந்து நேற்று பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 160 பள்ளிகளை சேர்ந்த 7638 மாணவிகள் உட்பட 14,333 பேர் பிளஸ் 1பொதுத்தேர்வு எழுதினர்.
இவர்களில் மாணவிகள் 7317 பேர்,மாணவர்கள் 5988 பேர் என 13,305 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 71 அரசு பள்ளிகளில் 11ம், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5ம்,மெட்ரிக் பள்ளிகளில் 33 என 49 பள்ளிகள் நுாறு சதவீதம்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2022-23ம் கல்வி ஆண்டை போலவே 2023-24 கல்வி ஆண்டில் 92.83 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநில அளவில்13வது ரேங்க் கிடைத்துள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.