/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில லீக் ஹாக்கி போட்டியில் ராமநாதபுரம் அணி சாம்பியன்
/
மாநில லீக் ஹாக்கி போட்டியில் ராமநாதபுரம் அணி சாம்பியன்
மாநில லீக் ஹாக்கி போட்டியில் ராமநாதபுரம் அணி சாம்பியன்
மாநில லீக் ஹாக்கி போட்டியில் ராமநாதபுரம் அணி சாம்பியன்
ADDED : செப் 05, 2024 05:11 AM

ராமநாதபுரம் : சென்னையில் நடந்த மாநில அளவிலான லீக் ஹாக்கி போட்டியில் ராமநாதபுரம் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பையை வென்றனர்.
தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பில் பள்ளி அணிகளுக்கான மாநில லீக் போட்டி சென்னை எழும்பூரில் நடந்தது.
இதில் ராமநாதபுரம் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி அணி 2: 0 என்ற கோல்கணக்கில் மதுரை மண்டல ஒருங்கிணைந்த அணியை வென்று சாம்பியன் பட்டம், கோப்பையை வென்றது.
விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் வெற்றிக்கோப்பை, சான்றிதழ், பரிசுகளை ராமநாதபுரம் அணிக்கு வழங்கி பாராட்டினர்.
மாநில அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தமாணவர்களை கலெக்டர் சிம்ரன் சிங் காலோன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.