/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்திற்கு சீரான குடிநீர் வழங்கப்படும்: கலெக்டர் தகவல்
/
ராமநாதபுரத்திற்கு சீரான குடிநீர் வழங்கப்படும்: கலெக்டர் தகவல்
ராமநாதபுரத்திற்கு சீரான குடிநீர் வழங்கப்படும்: கலெக்டர் தகவல்
ராமநாதபுரத்திற்கு சீரான குடிநீர் வழங்கப்படும்: கலெக்டர் தகவல்
ADDED : ஜூலை 01, 2024 05:52 AM
ராமநாதபுரம், : திருச்சி முக்கொம்பு மேலணையிலுள்ள கதவணைகள் சரிசெய்யும் பணி முடிந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் 2நாட்களில் ராமநாதபுரத்திற்குசீரான குடிநீர் வழக்கம்போல வழங்கப்படும் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் கூறியுள்ளதாவது; திருச்சிமுத்தரசநல்லுார் அருகில் காவிரி ஆற்றினை நீராதாரமாகக்கொண்டு தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து நீரேற்றம் செய்து மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களாக பொதுப்பணித்துறையினர் சார்பில் மேலணையிலுள்ள (முக்கொம்பு) கதவணைகள் சரி செய்யும் பணிகள் நடந்தது. இதனால்தலைமை நீரேற்று நிலையத்திற்கு நீர்வரத்து இல்லை. மாவட்டத்திற்கு குடிநீர் சரிவர வழங்க இயலவில்லை. பொதுப்பணித்துறை மேற்கொண்ட பணிகள்முடிந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு,தலைமை நீரேற்று நிலையத்திற்கு நீர் வந்துள்ளது. இருநாட்களில்தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வழக்கம் போல் சீரான குடிநீர் வழங்கப்படும் என்றார்.