/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாரியூரில் ராமசேது மகா சமுத்திர ஆரத்தி
/
மாரியூரில் ராமசேது மகா சமுத்திர ஆரத்தி
ADDED : மே 26, 2024 11:01 PM

சாயல்குடி : சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் அருகே மன்னார் வளைகுடா கடற்கரையில் ராமசேது மகா சமுத்திர ஆரத்தி நடந்தது.
மதுரையில் உள்ள பிரம்படிபட்டு பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கோயிலில் இருந்து நேற்று அதிகாலை 3:30 மணிக்கு புறப்பட்ட ஆரத்தி குழுவினர் காலை 6:00 மணிக்கு மாரியூர் மன்னார் வளைகுடா கடற்கரைக்கு வந்தனர்.
அங்கு உற்ஸவர் நடராஜப் பெருமானை தாம்பூல தட்டில் வைத்து 16 வகையான மூலிகை பொடிகளால் சிவநாமம் முழங்க அபிஷேகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
சிவனடியார்கள், பக்தர்கள் கயிலை வாத்தியம் முழங்க சிவ நாம அர்ச்சனை செய்தனர்.
அங்கிருந்து திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் உற்ஸவர் நடராஜ பெருமானுக்கு மூலிகை பொடிகளால் அபிஷேகமும் தொடர்ந்து கடலில் சமுத்திர ஆரத்தி நிகழ்வும் நடந்தது.
காலை 11:00 மணிக்கு தேவிபட்டினம் சென்று கடற்கரை ஓரத்திலும், உச்சிப்புளி அருகே அரியமான் பகுதியிலும், ராமேஸ்வரம் அருகே வில்லுண்டி தீர்த்தம் கடற்கரை ஓரத்தில் உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகளும், தீப தூப நெய்வேத்தியமும் தொடர்ந்து நடந்தது.
இவ்விழாவில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை மதுரை ஆலவாயர் அருட்பணி மன்ற ஆன்மீக ஆலய பயணத்தினர் செய்தனர்.

