/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வாபஸ்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வாபஸ்
ராமேஸ்வரம் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வாபஸ்
ராமேஸ்வரம் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வாபஸ்
ADDED : ஏப் 06, 2024 03:56 AM
ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்த தேர்தல் புறக்கணிப்பை மீன்துறை அதிகாரிகளின் சமரச பேச்சு வார்த்தையால், போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெற்றனர்.
இலங்கையில் சிறை தண்டனை பெற்ற மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். மேலும் ஏப்.19ல் நடக்கவுள்ள தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் ராமநாதபுரம் மீன்துறை துணை இயக்குநர் பிரபாவதி, ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குனர் அப்துல்காதர் ஜெயிலானி முன்னிலையில் மீனவர்களுடன் சமரச கூட்டம் நடந்தது.
இதில், இலங்கையில் மீனவர்களுக்கு வழங்கிய சிறை தண்டனை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதால் தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெறும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர். அதன்படி போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெற்றனர். கூட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், தேவதாஸ், சேசு, சகாயம், எமிரேட், பலர் பங்கேற்றனர்.

