/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் பாரதி நகரில் தாழ்வான மின்கம்பியால் பீதி
/
ராமேஸ்வரம் பாரதி நகரில் தாழ்வான மின்கம்பியால் பீதி
ராமேஸ்வரம் பாரதி நகரில் தாழ்வான மின்கம்பியால் பீதி
ராமேஸ்வரம் பாரதி நகரில் தாழ்வான மின்கம்பியால் பீதி
ADDED : ஆக 12, 2024 11:51 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் பாரதி நகரில் தாழ்வாக உள்ள உயரழுத்த மின்சார கம்பியால் மக்கள் பீதியில் உள்ளனர்.
ராமேஸ்வரம் பாரதி நகரில் நுாறுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பிரதான ரோட்டோர மின்கம்பத்தில் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாக உள்ளது.
இதனால் தெருவில் லாரிகளில் பொருள்களை கொண்டு வர முடியாமலும், பொதுமக்கள் சாலையில் பொருள்களை எடுத்துச் செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் இந்த மின் கம்பிகள் வீட்டு இணைப்பு மின்வயரில் உரசி செல்வதால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
தாழ்வான மின்கம்பியை சீரமைக்க மின்வாரியத்தில் மக்கள் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
எனவே தெரு மக்களுக்கு விபரீதம் ஏற்படுவதற்கு முன் தாழ்வாகச் செல்லும் மின்கம்பியை சீரமைக்க கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.

