/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.35 கோடி
/
ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.35 கோடி
ADDED : ஜூன் 01, 2024 04:13 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.1.35 கோடி வருவாயாக கிடைத்தது.
ராமேஸ்வரம் கோயிலில்30 நாட்களுக்குப் பின் நேற்று கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் ஊழியர்கள் காணிக்கைகளை சேகரித்தனர்.
இதனை கோயில் கல்யாண மண்டபத்தில் கோயில் ஊழியர்கள், சேலம் பகுதியை சேர்ந்த 200க்கு மேற்பட்ட சிவனடியார்கள் எண்ணினார்கள்.
இதில் ரொக்கம் 1 கோடியே 35 லட்சத்து 11 ஆயிரத்து 800 ரூபாயும், தங்கம் 77 கிராம், வெள்ளி 4 கிலோ 105 கிராம் காணிக்கையாக கிடைத்தது. இதனை வங்கிகளில் டிபாசிட் செய்ய கோயில் இணை ஆணையர் உத்தரவிட்டார்.