/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயில் கழிப்பறை முன் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் பாராமுகம்
/
ராமேஸ்வரம் கோயில் கழிப்பறை முன் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் பாராமுகம்
ராமேஸ்வரம் கோயில் கழிப்பறை முன் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் பாராமுகம்
ராமேஸ்வரம் கோயில் கழிப்பறை முன் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் பாராமுகம்
ADDED : செப் 10, 2024 11:54 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி பக்தர்களுக்கான புதிய கழிப்பறை கட்டடம் முன்புள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் திறக்க முடியாமல் முடங்கியுள்ளது.
ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பறை வசதி இல்லாததால் பாதிக்கப்பட்டனர். இதனை தவிர்க்க 2020ல் கோயில் நிர்வாகம் ரூ.80 லட்சத்தில் கோயில் வடக்கு ரத வீதியில் ஆண், பெண் பக்தர்களுக்கு தலா 22 கழிப்பறை கூடம் அமைத்தது.
இக்கட்டடம் அமைத்து 4 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கி கிடந்ததால் கட்டடம் மற்றும் கழிவு நீர் செல்லும் குழாய் கதவுகள் பலவீனமாகி உடையும் தருவாயில் உள்ளது. ஓரிரு மாதத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட உள்ளதால் கழிப்பறையில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகள் பாதாள சாக்கடை குழாயுடன் இணைக்கப்பட்டது.
இதனால் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், கழிப்பறை முன்புள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுமாறு கோயில் அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் கடையை அகற்றாமல் அடம் பிடித்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற ராமேஸ்வரம் தாசில்தார், நகராட்சி கமிஷனர், மாநில நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு கோயில் அதிகாரிகள் போனிலும், கடிதம் மூலம் வலியுறுத்தினர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் முடங்கிய கழிப்பறையை திறக்க முடியாமல் கோயில் அதிகாரிகள் திணறுகின்றனர்.