/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு தாருங்கள்'
/
'இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு தாருங்கள்'
'இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு தாருங்கள்'
'இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு தாருங்கள்'
ADDED : ஜூலை 13, 2024 09:46 PM

ராமேஸ்வரம்:'இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டுத் தாருங்கள்' என மத்திய மீன்வளம், கால்நடைத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கிடம், மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
நேற்று ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார். பின் அரசு ஓய்வு இல்லத்தில் இருந்த அமைச்சரை ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, சகாயம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில், 'இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள், 160 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படை சிறைபிடித்த படகுகளில் மீட்க முடியாமல் சேதமடைந்த படகிற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
'இலங்கை கடற்படை தாக்குதல் சிறை பிடிப்பால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் இப்பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.