/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை ஆற்று தடுப்பு அணையில் நாணல், கருவேல மரம் ஆக்கிரமிப்பு ஊற்று நீருக்கும் சிக்கல்

ADDED : ஆக 01, 2024 04:19 AM

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளுக்கு அருகில் நாணல் மற்றும் சீமைக் கருவேல மரங்கள் வந்துள்ளன. இதனால் ஊற்று நீரை சேகரிக்க வரும் மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய் பாசனங்களை மேம்படுத்தும் வகையில் வைகை ஆற்றில் இருந்து அவ்வப்போது தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கால்வாய்கள் வழியாக பல கண்மாய்களுக்கு சென்று விவசாயம் செழிக்க உதவுகிறது.
குடிநீர் தேவைக்கு ஊற்று நீரை அதிகரிக்கும் வகையில் பரமக்குடியில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பணைகளில் உள்ள தண்ணீரை உறிஞ்சி நாணல் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன.
சீமைக் கருவேல மரங்களின் வேர்கள் 100 அடி ஆழம் வரை சென்று தண்ணீரை உறிஞ்சி வளரும் தன்மை கொண்டுள்ளது. இதனால் வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய தேவைக்கு தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
தடுப்பணைகளின் தளம், சுவர்கள் என சீமைக் கருவேல மரங்களால் சேதமடைகின்றன. எனவே வைகை ஆற்றில் அருகில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள், நாணல்களை அகற்றி, தடுப்பணையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.