ADDED : ஜூலை 14, 2026 02:50 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான செஸ் போட்டி நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் செல்வம் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் பாண்டியன் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.
பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். உடற்கல்வி ஆசிரியர்கள் காளிதாஸ், ராமமூர்த்தி, மோரிஸ், கலா, கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
