/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மலேசியாவில் இறந்த தொழிலாளி உடலை மீட்க உறவினர் வலியுறுத்தல்
/
மலேசியாவில் இறந்த தொழிலாளி உடலை மீட்க உறவினர் வலியுறுத்தல்
மலேசியாவில் இறந்த தொழிலாளி உடலை மீட்க உறவினர் வலியுறுத்தல்
மலேசியாவில் இறந்த தொழிலாளி உடலை மீட்க உறவினர் வலியுறுத்தல்
ADDED : மே 08, 2024 06:10 AM

ராமநாதபுரம் : மலேசியாவில் இறந்த பரமக்குடி சரஸ்வதிநகரை சேர்ந்த தொழிலாளி ராமையா உடலை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.
பரமக்குடி அருகே வேந்தோணி சரஸ்வதி நகரை சேர்ந்தவர் ராமையா 47. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். மலேசியாவில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்த ராமையா மே 4ல் இறந்து விட்டதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து ராமையாவின் மனைவி தெய்வானை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களுடன் மனு அளித்தார். அதில், மலேசியாவில் இருந்து ராமையா உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என வலியுறுத்தினர்.