/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு ஜூலை 12 வரை காவல் நீட்டிப்பு
/
இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு ஜூலை 12 வரை காவல் நீட்டிப்பு
இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு ஜூலை 12 வரை காவல் நீட்டிப்பு
இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு ஜூலை 12 வரை காவல் நீட்டிப்பு
ADDED : ஜூன் 29, 2024 02:09 AM
ராமநாதபுரம்,:துாத்துக்குடி கடல் பகுதியில் எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது நீதிமன்ற காவலை ஜூலை 12 வரை நீடித்து ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகன்ராம் உத்தரவிட்டார்.
துாத்துக்குடி அருகே இந்திய கடலோர காவல் படையினர் வைபவ் கப்பலில் ரோந்து சென்ற போது எல்லை தாண்டி இந்திய பகுதியில் கன்னியாகுமரியில் இருந்து 70 நாட்டிக்கல் மைல் தொலைவில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களது படகை பறிமுதல் செய்து அதிலிருந்த 7 இலங்கை மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
இலங்கை காலே மாவட்டம் அம்பலன்கோடாவைச் சேர்ந்த ராமுது இண்டிகா திலிப்குமார 42, போக்லே பியால் டி சில்வா 44, கழுத்தோடக நிரங்க லக்மால் 27, கபுகே கியாங்கே தாரக அமிலகுமார 40, சுசாந்தா 39, ராம்புத்ரா சமிந்தா புஷ்ப குமார 37, மாலியா வடு சுபாலி 57, ஆகிய ஏழு பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு நேற்று ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகன்ராம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த விசாரணையில் 7 மீனவர்களுக்கும் ஜூலை 12 வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

