/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடி சர்ச் பகுதியில் ஆக்கிரமிப்பு கடை அகற்றம்
/
தனுஷ்கோடி சர்ச் பகுதியில் ஆக்கிரமிப்பு கடை அகற்றம்
தனுஷ்கோடி சர்ச் பகுதியில் ஆக்கிரமிப்பு கடை அகற்றம்
தனுஷ்கோடி சர்ச் பகுதியில் ஆக்கிரமிப்பு கடை அகற்றம்
ADDED : மே 24, 2024 02:19 AM

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி பழமையான சர்ச் முன்புள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது.
தனுஷ்கோடியில் 1964ல் ஏற்பட்ட புயலில் இங்குள்ள சர்ச், விநாயகர் கோயில், தபால் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல கட்டடங்கள் இடிந்தது.
இதில் சர்ச் பக்கவாட்டு சுவர்கள் உடைந்து முகப்பு சுவருடன் கம்பீரமாக சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சியளிக்கிறது. இந்நிலையில் சேதமடைந்துள்ள தனுஷ்கோடி சர்ச்சை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் ராமேஸ்வரம் நகராட்சி சமூக பொறுப்பு நிதி ரூ.36 லட்சம் செலவில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மரப் பலகையில் நடைமேடை அமைத்து உள்ளனர். இந்நிலையில் சர்ச்சை சுற்றி ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. தற்போது சர்ச் முன்புள்ள சில கடைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பயணிகள் நின்றபடி சர்ச்சை எளிதாக கண்டு ரசிக்கலாம்.