/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி வளாகத்தில் ஆபத்தான நீர்த்தேக்கத் தொட்டி அகற்றம்
/
பள்ளி வளாகத்தில் ஆபத்தான நீர்த்தேக்கத் தொட்டி அகற்றம்
பள்ளி வளாகத்தில் ஆபத்தான நீர்த்தேக்கத் தொட்டி அகற்றம்
பள்ளி வளாகத்தில் ஆபத்தான நீர்த்தேக்கத் தொட்டி அகற்றம்
ADDED : மே 28, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பயனற்ற நிலையில் சேதம் அடைந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது.
இதனால் பள்ளி வளாகத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் அச்சத்துடன் சென்று வரும் நிலை இருந்தது.
பள்ளி வளாகத்திற்குள் ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆபத்தான மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.