/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்கம்பத்தில் சுற்றியிருந்த செடி கொடிகள் அகற்றம்
/
மின்கம்பத்தில் சுற்றியிருந்த செடி கொடிகள் அகற்றம்
ADDED : ஜூன் 27, 2024 04:23 AM
ராமேஸ்வரம், : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமேஸ்வரத்தில் மின்கம்பத்தில் சுற்றி ஆக்கிரமித்திருந்த செடி கொடிகளை மின்வாரிய ஊழியர்கள் அகற்றினர்.
ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் செடி கொடிகள் படர்ந்து ஆக்கிரமித்து இருந்தது.
இதனால் அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டும், எதிர்காலத்தில் மின்கம்பி அறுந்து மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது என நேற்று தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவுப்படி நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள், மின் கம்பத்தில் படர்ந்திருந்த செடி கொடிகளை அகற்றியும், அருகில் இருந்த மர கிளைகளை வெட்டியும் சரிசெய்தனர். இதனால் மின் விபத்து தடுக்கப்பட்டது.