/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை கோயிலில் புனரமைப்பு பணி துவக்கம்
/
திருவாடானை கோயிலில் புனரமைப்பு பணி துவக்கம்
ADDED : ஆக 08, 2024 10:51 PM
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலை புனரமைக்கும் பணிகள் துவங்கியது.
திருவாடானையில் பழமை வாய்ந்த ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. மழைக் காலங்களில் மண்டபங்களில் தண்ணீர் கசிந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்ததால் கோயிலை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து கோயிலை புனரமைக்க அரசு ரூ.2 கோடி ஒதுக்கியது.
இது குறித்து தேவஸ்தான செயல் அலுவலர் பாண்டியன் கூறுகையில், இக்கோயிலை புனரமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. முதல் கட்டமாக கோயிலின் மேற்பகுதியில் பழைய தட்டோடுகளை அகற்றி விட்டு புதிதாக அமைக்கப்படும்.
கோயில் வளாகத்தை சுற்றிலும் சிமென்ட் நடை பாதை அமைக்கப்பட்டு பக்தர்கள் நடந்து செல்லும் வகையில் வசதி செய்யப்படும்.
மேலும் பல்வேறு பணிகள் ஆடிப்பூரத் திருவிழா முடிந்தவுடன் தொடர்ந்து நடைபெறும் என்றார்.