/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் பாலத்தில் இரும்பு பிளேட் பழுது நீக்கம்
/
பாம்பன் பாலத்தில் இரும்பு பிளேட் பழுது நீக்கம்
ADDED : ஜூன் 02, 2024 02:32 AM

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் சேதமடைந்த இரும்பு பிளேட் தினமலர் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.
பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் நடுவில் பிங்கர் ஜாயின்ட் இரும்பு பிளேட் சேதமடைந்து இரும்பு போல்ட் வெளியில் நீண்ட படி இருந்தது. பாலத்தை கடந்து செல்லும் வாகனங்களின் டயர்கள் சேதமடைந்தது.
வாகனங்கள் செல்லும் போது பெரும் அதிர்வுடன் சத்தம் எழுந்ததால் பயணிகள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று தேசிய நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் சேதமடைந்த இரும்பு பிளேட்டை அகற்றி அதன் கீழே ரசாயன கலவை ஊற்றி இரும்பு பிளேட்டை பொருத்தி சீரமைத்தனர்.