/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சனவேலி கொக்கூரணி ரோட்டில் பள்ளங்கள் சீரமைப்பது துவக்கம்
/
சனவேலி கொக்கூரணி ரோட்டில் பள்ளங்கள் சீரமைப்பது துவக்கம்
சனவேலி கொக்கூரணி ரோட்டில் பள்ளங்கள் சீரமைப்பது துவக்கம்
சனவேலி கொக்கூரணி ரோட்டில் பள்ளங்கள் சீரமைப்பது துவக்கம்
ADDED : செப் 16, 2024 05:00 AM

ஆர்.எஸ்.மங்கலம் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணி ரோட்டில் பள்ளங்களை சீரமைக்கும் பணி துவங்கியது.
திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, சனவேலி பாலத்தில் இருந்து கொக்கூரணி செல்லும் ரோடு கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது. அப்போது ரோட்டின் குறுக்கே மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதற்காக 10க்கும் மேற்பட்ட இடங்களில் துாம்பு பாலம் அமைக்கப்பட்டது.
ரோட்டின் குறுக்கே செல்லும் துாம்பு பாலம் முறையாக அமைக்கப்படாததால் பாலத்தின் இரு ஓரங்களிலும் பள்ளங்கள் ஏற்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்துக்களில் சிக்கி காயம் அடைந்தனர்.
இதுகுறித்து நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரோட்டில் பள்ளங்களை சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டனர். 10க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள பள்ளங்களை அதிகாரிகள் முறையாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதியனர் வலியுறுத்தினர்.