ADDED : ஆக 29, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: -கமுதி அருகே சிங்கப்புலியாபட்டி கிராமத்தில் தினமலர் செய்தி எதிரொலியாக சேதமடைந்த மின்கம்பத்தை மின்வாரிய பணியாளர்கள் மாற்றினர்.
கமுதி அருகே சிங்கப்புலியாபட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு வீடுகள் அருகே ரோட்டின் நடுவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி முழுவதும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இவ்வழியே நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்பட்டனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக கமுதி மின்வாரிய பணியாளர்கள் ரோட்டின் நடுவில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்றி ரோட்டோரத்தில் புதிய மின்கம்பம் அமைத்தனர்.