/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய ஜெட்டி பாலம் அமைக்க கோரிக்கை
/
புதிய ஜெட்டி பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : மார் 30, 2024 05:09 AM

கீழக்கரை, : கீழக்கரை மன்னார் வளைகுடா கடலில் 1985ல் கட்டப்பட்ட ஜெட்டி பாலம் சேதமடைந்த நிலையில் புதிய ஜெட்டி பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகம் முன் கடலில் 50 மீ., நீளத்தில் 12 அடி அகலத்தில் ஜெட்டி பாலம் உள்ளது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த நிலையில் உள்ள ஜெட்டி பாலத்தால் விபத்து அபாயம் உள்ளது.
இந்த ஜெட்டிப் பாலத்தில் சேதமடைந்த பகுதிகள் உள்ளன. இதனால் ரோந்து படகுகளை அருகே நிறுத்தி வைக்க வேண்டிய நிலை உள்ளது. பேரலைகளின் தாக்கத்தால் கரைப்பகுதியிலும் நிறுத்த வேண்டி உள்ளது.
எனவே சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள ஜெட்டிப் பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

