/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாழ்வான பகுதியை சீரமைக்க கோரிக்கை
/
தாழ்வான பகுதியை சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 04, 2024 12:57 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் காந்தி நகர் வடக்கு பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முதுகுளத்துார் பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட காந்தி நகர் வடக்கு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. மழைநீர் செல்லும் வரத்துக்கால்வாயை ஒட்டி குடியிருப்பு அமைந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாகவே தாழ்வான பகுதியில் சாலை வசதி இல்லாமல் உள்ளது.
வார்டு கவுன்சிலர் பார்வதி கூறியதாவது:
காந்திநகர் வடக்கு பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலைவசதி இல்லாமல் உள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் முழுவதும் தேங்கி மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. கர்ப்பிணிகள், முதியவர்கள் சிகிச்சைக்கு கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
அவசர நேரத்தில் செல்வதற்கு கூட மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது பருவமழை காலம் துவங்குவதற்கு முன் ரோடு அமைக்கவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவடு மண் கொட்டி தாழ்வான பகுதியை சீரமைக்க வேண்டும் என்றார்.