/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் சேர்க்க கோரிக்கை
/
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் சேர்க்க கோரிக்கை
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் சேர்க்க கோரிக்கை
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் சேர்க்க கோரிக்கை
ADDED : பிப் 28, 2025 07:09 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
முதுகுளத்துார் காந்தி சிலை துவங்கி பஜார் வீதி, பஸ்ஸ்டாண்ட் வடக்கூர், ஆற்று பாலம் வரை 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தற்போது முதுகுளத்துார் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 10க்கு மேற்பட்டோர் திரிகின்றனர். சிலர் அரைகுறை ஆடைகளில் திரிகின்றனர். சமூக ஆர்வலர்கள் புதிய ஆடைகள் வாங்கிக் கொடுத்தாலும் அதை அணிவதில்லை.
இந்நிலையில் முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறார். இதனால் பஸ்ஸ்டாண்ட், கடைகளுக்கு செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.
ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை அதிகாரிகள் காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று வர்த்தகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.