/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை நகராட்சியில் நிரந்தர கமிஷனர் நியமிக்க கோரிக்கை; பாதிக்கப்படும் பொதுமக்கள்

ADDED : ஜூலை 25, 2024 11:40 PM
கீழக்கரை : -கீழக்கரையில் 1 முதல் 21 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு கமிஷனராக செல்வராஜ் பணிபுரிந்து வந்தார்.
இவர் நான்கு மாதங்களாக மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். கூடுதல் பொறுப்பாக ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வீன் கவனித்து வருகிறார்.
தற்போது நகராட்சி கமிஷனருக்கான இதர பணிகளுக்கான ஒப்புதல் உள்ளிட்ட வேலைப்பளு அதிகம் உள்ள நிலையில் கூடுதல் பொறுப்பாக ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் கவனிக்க வேண்டி உள்ளதால் பெரும்பாலான பணிகள் தாமதமாக நடப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மக்கள் நல பாதுகாப்புக் கழகச் செயலாளர் முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது: கீழக்கரை நகராட்சியில் மக்கள் தொகை அடிப்படையில் 32 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் 17 நிரந்தர பணியாளர்கள் மட்டுமே பணி செய்கின்றனர். நகரில் பல இடங்களில் குப்பை அள்ளப்படாமல் குவிந்து வருகிறது.
அரசு அலுவலக நிர்வாக காரணங்களுக்காக கமிஷனர் பணியிடம் அவசிய தேவையாகும். நகராட்சியின் விரிவாக்கம் கருதி நிரந்தர கமிஷனர் மற்றும் கூடுதல் துப்புரவு பணியாளர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.