/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அய்யனார் கோயில் குளத்தை சுத்தம் செய்ய கோரிக்கை
/
அய்யனார் கோயில் குளத்தை சுத்தம் செய்ய கோரிக்கை
ADDED : செப் 16, 2024 05:54 AM

திருவாடானை : திருவாடானை அருகே சிறுமலைக்கோட்டையில் அய்யனார் கோயில் உள்ளது. இக் கோயில் முன்புள்ள குளத்தில் கோரை செடிகள் அடர்ந்துள்ளது. சுத்தம் செய்து மழைநீரை சேமிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
சிறுமலைக்கோட்டை மக்கள் கூறியதாவது- அய்யனார் கோயில் குளம் என்பதால் குடிநீராக பயன்படுத்தி வந்தோம். நாளைடைவில் கோரை செடிகள் அடர்ந்து வளர்ந்தது. குளமும் துார்வாராமல் போனதால் தேங்கும் நீர் பயன்படாமல் உள்ளது. இக் குளத்தை சுத்தம் செய்யும் பட்சத்தில் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் போது, இங்குள்ள நீரை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே கோரை செடிகளை அகற்றி, சுத்தம் செய்ய சம்பந்தபட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

