/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முகிழ்த்தகம் ரேஷன்கடை கட்டடம் திறக்க கோரிக்கை
/
முகிழ்த்தகம் ரேஷன்கடை கட்டடம் திறக்க கோரிக்கை
ADDED : ஜூன் 27, 2024 11:37 PM
திருவாடானை : திருவாடானை அருகே முகிழ்த்தகம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இங்கு வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. கட்டடத்தில் மழைக் காலத்தில் நீர் உள்ளே இறங்குவதால் பொருட்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.10 லட்சம் செலவில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகியும் திறக்கவில்லை.
கிராமத்தை சேர்ந்த மூர்த்தி கூறுகையில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை திறக்கக் கோரி அலுவலர்களிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. வாடகை கட்டடத்தில் பொருட்கள் பாதுகாப்பாக இல்லை.
எனவே புதிய கட்டடத்தை விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

