/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தெருவிளக்கு, குடிநீர் குழாய் அமைக்கும் பணியாளர் கூலியை உயர்த்த கோரிக்கை
/
தெருவிளக்கு, குடிநீர் குழாய் அமைக்கும் பணியாளர் கூலியை உயர்த்த கோரிக்கை
தெருவிளக்கு, குடிநீர் குழாய் அமைக்கும் பணியாளர் கூலியை உயர்த்த கோரிக்கை
தெருவிளக்கு, குடிநீர் குழாய் அமைக்கும் பணியாளர் கூலியை உயர்த்த கோரிக்கை
ADDED : செப் 18, 2024 05:12 AM
திருவாடானை,: ஊராட்சிகளில் தெருவிளக்கு, குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியாளர்களுக்கு தினக்கூலி குறைவாக வழங்கபடுகிறது. அதனை உயர்த்தி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் அடிப்படை தேவைகள், பிரச்சனைகளை தீர்ப்பதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவு பணி, கொசு ஒழிப்பு, மழை நீர் கால்வாய் பராமரிப்பு, குடிநீர் தொட்டி பராமரிப்பு என பல்வேறு நிலைகளில் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இதில் கிராமங்களுக்கு மிக முக்கிய தேவையான தெருவிளக்கு பராமரித்தல், குடிநீர் பைப் லைன் அமைத்தல் அவசியமாக உள்ளது.
தெருவிளக்கு பராமரிப்பவர்களுக்கு ஊதியமாக ரூ.70ம், குடிநீர் பைப் லைன் அமைப்பவர்களுக்கு ரூ.400 ம் கூலி நிர்ணயம் செய்யபட்டு வழங்கபடுகிறது.
இத்தொகை போதுமானதாக இல்லாததால் இப் பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஊராட்சி தலைவர்கள் சொந்த செலவில் அதிக கூலி வழங்கி பணிகளை நிறைவேற்றி வருகின்றனர்.
ஊராட்சி தலைவர்கள் கூறுகையில், ஊராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 14 வது நிதிக்குழு மானியம், ஒப்படைக்கபட்ட வருவாய் மானியம் மற்றும் மாநில நிதிக்குழு மானியத்தை அரசு வழங்குகிறது.
இதை கொண்டு பணியாளர் சம்பளம், குடிநீர் வினியோகம், பொது சுகாதாரம், தெருவிளக்கு மற்றும் கழிவறை பராமரிப்பு உள்பட பல்வேறு பணிகள் செய்யபடுகிறது.
குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியாளர்களுக்கு சொந்த செலவில் கூடுதலாக கூலி வழங்குகிறோம். எனவே பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்த அரசு உத்தரவிட வேண்டும் என்றனர்.

