ADDED : ஜூன் 29, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் மலைச்சாமி 51.
இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூலி வேலைக்கு சவுதி அரேபியா சென்றார். ஜூலை மாதம் ஊர் திரும்ப விமான டிக்கெட் புக் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மாரடைப்பில் மலைச்சாமி இறந்தார்.
சக தொழிலாளர்கள் அவரது வீட்டிற்கு தெரிவித்தனர். மலைச்சாமிக்கு மனைவி வீர ராஜேஸ்வரி 40, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
கணவரின் உடலை ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

