ADDED : செப் 10, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உச்சிபுளி: மண்டபம் பேரூராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் எனஅப்பகுதி சமத்துவம் ஆட்டோ ஓட்நனர்கள் சங்கம்வலியுறுத்தியுள்ளது. சங்கத் தலைவர் என்.செல்வம் கூறியதாவது:
மண்டபத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீட்டின் முன்பு உள்ள சாலையில் சிமென்ட் மற்றும் கயிறு கட்டி வேகத்தடை அமைத்துள்ளனர். இவற்றில் ஆட்டோக்கள் ஏறி இறங்கும் போது வயதானவர்கள், கர்ப்பிணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். விபத்து அபாயம் இல்லாத இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வேகத்தடைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

