/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆப்பனுாருக்கு பள்ளி நேரத்தில் டவுன் பஸ் இயக்க கோரிக்கை
/
ஆப்பனுாருக்கு பள்ளி நேரத்தில் டவுன் பஸ் இயக்க கோரிக்கை
ஆப்பனுாருக்கு பள்ளி நேரத்தில் டவுன் பஸ் இயக்க கோரிக்கை
ஆப்பனுாருக்கு பள்ளி நேரத்தில் டவுன் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஆக 15, 2024 04:08 AM
கடலாடி : கடலாடி அருகே ஆப்பனுாருக்கு உரிய நேரத்தில் அரசு டவுன் பஸ் வராததால் ஆசிரியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
சாயல்குடியில் இருந்து கடலாடி வழியாக ஆப்பனுார், முதுகுளத்துாருக்கு அரசு டவுன் பஸ் மற்றும் முதுகுளத்துாரில் இருந்து ஆப்பனுார் சென்று பின்னர் கடலாடி வழியாக சாயல்குடி செல்வதற்கும் அரசு பஸ் இயக்கப்படுகிறது.
பள்ளி, கல்லுாரி செல்லும் நேரமான காலை 8:00 மணி முதல் 8:30க்குள் பஸ்கள் வராமல் தாமதமாக 9:00 மணிக்கு மேல் வருவதால் உரிய நேரத்தில் பள்ளி செல்வதற்கு தாமதமாகும் நிலை ஏற்படுகிறது. ஆப்பனுார் ஊராட்சியில் அரசுப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு வரக்கூடிய ஆசிரியர்கள் பணியாளர்கள் தாமதமாக வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உரிய நேரத்தில் பஸ்களை இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.