ADDED : செப் 02, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஏ.எஸ்.பி.,யாக கே.நேகா பொறுப்பேற்றார். தமிழக போலீஸ் துறையில் புதிதாக பணியில் சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களுக்கு அண்மையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் 2023 யு.பி.எஸ்.சி., தேர்வு மூலம் தேர்வான நேகா ராமநாதபுரம் உட்கோட்ட ஏ.எஸ்.பி., யாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ராமநாதபுரம் அலுவலகத்தில் அவர் நேற்று பொறுப்பேற்றார்.
––
