/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி சப்-கலெக்டருக்கு எதிராக வருவாய்த்துறை போராட்ட அறிவிப்பு
/
பரமக்குடி சப்-கலெக்டருக்கு எதிராக வருவாய்த்துறை போராட்ட அறிவிப்பு
பரமக்குடி சப்-கலெக்டருக்கு எதிராக வருவாய்த்துறை போராட்ட அறிவிப்பு
பரமக்குடி சப்-கலெக்டருக்கு எதிராக வருவாய்த்துறை போராட்ட அறிவிப்பு
ADDED : ஆக 15, 2024 04:09 AM
ராமநாதபுரம், : வருவாய்த்துறை அலுவலர்களை அரசு பணி செய்யவிடாமல்சொந்த தேவைக்கு பயன்படுத்துவதாக பரமக்குடிசப்-கலெக்டரை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம்தொடர் போராட்டம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ராமநாதபுரம்மாவட்டத்தலைவர் பழனிக்குமார் கூறியிருப்பதாவது: சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் இணையதளம் வழியாகநடந்தது. மாவட்ட செயலாளர் ஜமால் முகமது, பொருளாளர் செல்லப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர்வருவாய்த்துறை அலுவலர்களை அரசு பணிகள், மக்கள்நலத்திட்டங்களை செய்ய விடாமல் தனது சொந்த வேலையைபார்க்க வற்புறுத்துகிறார். மறுக்கும் அலுவலர்களைமிரட்டுவதை கைவிட வேண்டும். வேறு அலுவலகத்தில்பணிபுரியம் தட்டச்சர்களை மாற்றுப்பணிக்கு வரச்சொல்லிசந்திக்க விடாமல் காத்திருக்க வைக்கிறார்.முதுநிலை வருவாய் ஆய்வாளர் மீது கோப்பை துாக்கி வீசியுள்ளார்.
இச்செயல்களை கண்டித்து நாளை (ஆக.16) அனைத்து தாலுகாஅலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு சங்கம் சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ஆக.20ல் தற்செயல் விடுப்புஎடுத்துபரமக்குடி சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்புபோராட்டம் நடத்தப்படும். ஆக.21ல் முதல் சப்-கலெக்டர்பங்கேற்கும் அனைத்து ஆய்வு கூட்டங்களையும் புறகணிப்பதுஎன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என்றார்.