/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிகரிக்கும் தற்கொலைகள் உளவியல் விழிப்புணர்வு தேவை
/
அதிகரிக்கும் தற்கொலைகள் உளவியல் விழிப்புணர்வு தேவை
அதிகரிக்கும் தற்கொலைகள் உளவியல் விழிப்புணர்வு தேவை
அதிகரிக்கும் தற்கொலைகள் உளவியல் விழிப்புணர்வு தேவை
ADDED : மே 07, 2024 05:09 AM
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் ஒரே மாதத்தில் 8 பேர் தற்கொலை செய்துகொண்டனர். குடும்ப பிரச்னையால் தற்கொலை அதிகரித்து வருவதால் மன ரீதியான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
திருவாடானை, தொண்டி பகுதியில் சில மாதங்களாக தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல பிரச்னைகளால் சமாளிக்க முடியாதநிலை வரும் போது தற்கொலை எண்ணம் வருகிறது. இதில் பெண்களை விட ஆண்கள் அதிகமானோர் தற்கொலை செய்துள்ளனர்.
கணவன், மனைவி தகராறு, தொழில், உடல்நிலை பாதிப்பு என பல்வேறு காரணங்களால் இச்சம்பவங்கள் நடக்கிறது. தவிர சிறுவர், சிறுமிகளும் தற்கொலை செய்து கொள்வது பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்குள்எஸ்.பி.பட்டினம், அந்திவயல், தண்டலக்குடி, கம்பக்கோட்டை, திருப்பாலைக்குடி, திருவெற்றியூர், நம்புதாளை, திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் 15 வயது சிறுமியும், 10 வயது சிறுவனும், நான்கு ஆண்கள், இரு பெண்கள்தற்கொலை செய்துஉள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தற்கொலை எண்ணத்தில் உள்ளோரிடம் மன ரீதியாக ஆதரவு அளித்தால் தற்கொலை எண்ணம் மாறிவிடும். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு கூட்டங்கள்நடத்தி ஆலோசனை வழங்கினால் தற்கொலை எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.