/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடைந்த திட்ட மதிப்பீட்டு கல்வெட்டால் விபத்து அபாயம்
/
சேதமடைந்த திட்ட மதிப்பீட்டு கல்வெட்டால் விபத்து அபாயம்
சேதமடைந்த திட்ட மதிப்பீட்டு கல்வெட்டால் விபத்து அபாயம்
சேதமடைந்த திட்ட மதிப்பீட்டு கல்வெட்டால் விபத்து அபாயம்
ADDED : ஆக 12, 2024 11:54 PM

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை ஊராட்சியில் உள்ள வள்ளி மாடன் வலசை கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைத்ததற்கான திட்ட மதிப்பீடு கல்வெட்டு சுவர் சேதமடைந்துள்ளது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கிராம ஊராட்சிக்கு பணி வழங்கப்பட்ட சிமெண்ட் சாலை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்டது.
4 அடி உயரம் கொண்ட திட்ட மதிப்பீடு குறித்த விபரச்சுவர் எவ்வித பிடிமானமும் இன்றி தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால் அடிப்பகுதி சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
இப்பகுதியை கடந்து செல்லும் சிறுவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் கல்வெட்டு விபர சுவரை முறையாக நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.